புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.வடமராட்சி கிழக்கில் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கினார் என்ற சந்தேகத்தின் பெயரில் குடும்பஸ்த்தர் ஒருவர் பருத்துறை பொலிஸாரால் கைது
செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவர் தனது அயல் வீட்டுச் சிறுமியை வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் அழைத்து வந்து துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் குறித்த சிறுமியுடன் இந்த நபர் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இதன் பின்னர் குறித்த சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்த பெற்றோர் அவரை மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தியிருக்கின்றனர்.

இதன்போது சிறுமி ஐந்து மாத கர்பணியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் பருத்துறை பொலிஸில் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு கொடுத்துள்ளனர்.

முறைப்பாட்டினடிப்படையில் குறித்த குடும்பஸ்த்தர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top