12 பி, இயற்கை உள்ளிட்ட படங்களுக்கு பின், போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்த ஷாம், சிறிய இடைவெளிக்கு பின், தற்போது, மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில், மும்பையில் நடந்தது. படப்பிடிப்பில், கையடக்க நவீன கேமராவுடன், ஒளிப்பதிவாளர்
பின் தொடர, அங்குள்ள தனியார் மருத்துவமனை அருகே, பரதேசி கோலத்தில், ஷாம் நடந்து செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. இதை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்து, அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை காவலர்கள், அவரை பயங்கரவாதி என நினைத்து, ரகசியமாக பின் தொடர்ந்து சென்று பிடித்து, தனி அறையில் கட்டிப்போட்டு அடைத்துள்ளனர்.இதை பார்த்து அதிர்ந்த ஒளிப்பதிவாளர், மருத்துவமனை காவலர்களிடம் உண்மையை விளக்கியும், அவர்கள் நம்பவில்லை. இறுதியாக, தனக்கு நெருக்கமான அதிகாரியிடம், ஷாம் விஷயத்தை கொண்டு செல்ல, அந்த அதிகாரி விளக்கிய பின், மருத்துவமனையில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக