விருதுநகர் :விருதுநகர் அருகே,மது போதையில் இருந்த பால் வியாபரி ஒருவர்,"காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்' அடிக்க மாட்டேன்குது, நானும் ஏறி பார்க்கிறேன்,'' என, மின்
கம்பத்தில் ஏறியவரை, கீழே இறக்குவதற்குள்,
அப்பகுதிமக்கள் மற்றும் போலீசாருக்கு போதும்... போதும்...என்றாகிவிட்டது.
விருதுநகர் அருகே ரோசல்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி ரங்கராஜ், 50. இவர், நேற்று பிற்பகல் 2 மணிக்கு, மது போதையின் உச்சத்தில் இருந்தார். விருதுநகர் ராமமூர்த்தி ரோடு வழியாக வந்தபோது, ""மின் கம்பத்தில் காக்கா உட்கார்ந்தால் "கரண்ட்' அடிக்க மாட்டேன்குது, நானும் ஏறி பார்க்கிறேன்,'' என, மின் கம்பத்தில் ஏறி உட்கார்ந்து கொண்õடர்.தகவலறிந்த மின்சார வாரியத்தினர், அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்தடை செய்தனர். அப்போது அவர்,மின் கம்ப வயர், பீஸ் கேரியரை பிடுங்கினார். போலீசார், பொது மக்கள் ஒரு மணி நேரமாக போராடியும், ரங்கராஜ் கீழே இறங்கவில்லை. பின் போலீசார்,டிப்பர் லாரியை வரவழைத்து, அதன் மீது ஏறி, ரங்கராஜை அடித்து கீழே இறக்கி, விரட்டி விட்டனர்.
அப்பகுதி ராஜ்குமார் ,""விளம்பரத்திற்காக, இது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். இதனால் பொது மக்கள் தான் பாதிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களை வெளியில் வர முடியாத வகையில்,போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களும் திருந்துவார்கள்,'' என்றார்.
டி.எஸ்.பி., ராமமூர்த்தி ,""மது போதையில் மின் கம்பம் மீது ஏறிய ரங்க ராஜ் மீது, தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். டவர், மின்கம்பம் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.-
0 கருத்து:
கருத்துரையிடுக