கோமாளி வேடம் அணிந்த நிலையில் சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்ததுடன் அதனை ஆபாச புகைப்படங்களாக இணையத்தளத்தில் வெளியிட்ட நபரொருவரை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் இலினொய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த மார்டின் எவினிக் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர் சிறுமியொருவருடன்; பாலியல் செற்பாட்டில் ஈடுப்படுவதை புகைப்படமெடுத்து அதனை இணையத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மேற்படி நபர், சிறுமியிடம்; கடந்த 2010 ஜுன் மாத்திலிருந்து இத்தகைய செயற்பாட்டை தொடர்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏவ்நிக் தனது முகதளப்பக்கத்தில் தன்னை கோமாளிபோன்று விபரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நபர், த கோர் ஒப் யூவர் நைட்மெயார்ஸ் என்ற இசைக்குழுவில் டிரம் வாசிப்பாளராக இருப்பதாக அதில் குறிப்பு எழுதியுள்ளார்.
இந்நபரை, த கோர் ஒப் யூவர் நைட்மெயார்ஸ் இசைக் குழுவினர் பேஸ்புக் இணையத்தளத்தில் ஏற்கனவே எச்சரித்துள்ளனர்.
இந்நபர் குற்றவாளியென நிருபிக்கப்படும்பட்சத்தில் 30 வருட சிறைத்தண்டனையும் 2,50,000 தண்டப்பணத்தை அறவிட நேரலாமென தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக