கேரளாவில் மீண்டும் ஒரு பாலியல் பயங்கரம் அம்பலத்திற்கு வந்துள்ளது. பரவூர் பகுதியில் பிளஸ் ஒன் மாணவியை அவரது பெற்றோரே பாலியல் கொடுமைக்குட்படுத்தி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவிலுள்ள பரவூர் பகுதியில் பிளஸ் 1 மாணவிக்கு அவரது பெற்றோரே கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் உள்ள ஆற்றில் குதித்து ஒரு இளம் பெண் தற்கொலைக்கு முயன்றார். அதைக் கவனித்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அந்த பெண்ணை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
அப்போது அந்த பெண் அங்கிருந்தவர்களிடம் தன்னை பெற்றோரே பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் அதனால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். இதையடுத்து அவரை போலீஸில் ஒப்படைத்தனர் மக்கள்.
போலீசார் அந்த மாணவியிடம் அவருக்கு நடந்த கொடுமைகள் குறித்து விசாரித்த போது, நான் பரவூர் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தேன். எனது தந்தை இரவு நேரங்களில் என்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவார். அப்போது என் தாய் வீட்டில் இருப்பது இல்லை. அவர் எங்கே சென்றார் என்று விசாரித்தபோது, அவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருப்பதும், இரவு நேரங்களில் அவரது வீட்டிற்கு தாயார் சென்று விடுவதும் தெரிய வந்தது.
இதனால் என் தாயே எனது நிலைக்கு காரணமாக இருப்பதை அறிந்து அழுதேன். ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருக்கும்போது தாயின் கள்ளக்காதலன் அங்கு வந்தார். அவரும் என்னை பலாத்காரம் செய்தார். இதை தாயிடம் கூறியபோது அவர் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. என்னை அவருக்கு உடன்படும்படி கூறினார்.
அதன் பிறகு என் தாயும், தந்தையும் என்னை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலருக்கும் என்னை விருந்தாக்கினர். இதனால் உடலும் உள்ளமும் நொந்துபோன நான் வாழ விருப்பமின்றி தற்கொலைக்கு முயன்றேன் என்று அழுதபடி கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக