தேனி: ஆண்டிப்பட்டி அருகே 9ம் வகுப்பு மாணவியை 3 நாட்கள் அறைக்குள் அடைத்து வைத்து கற்பழித்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பால்சாமி மகன் கருப்பசாமி(30). திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். அவர் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொன்னம்மாள்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது அடைக்கன்பட்டியைச் சேர்ந்த காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 9வது வகுப்பு மாணவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில் கருப்பசாமி காவ்யாவுக்கு திருமண ஆசை காட்டி சுற்றுலா என்ற பெயரில் திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை திண்டுக்கல் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற கருப்பசாமி மாணவியை ஒரு அறையில் அடைத்து வைத்து 3 நாட்களாக கற்பழித்துள்ளார்.
கருப்பசாமியிடம் இருந்து எப்படியோ தப்பித்த மாணவி தனது ஊருக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கருப்பசாமியை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக