யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப் பகுதியில் தனியார் வங்கி ஒன்றில் கடன் பெற்றுத்தருவதாக 5 லட்சம் ரூபாவினை மோசடி செய்த பெண் ஒருவர், அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறைப் பகுதியில் வசிக்கும் பெண்
ஒருவர் அந்தப் பகுதியில் ஒரு தனியார் வங்கி திறக்கப்படவுள்ளதாக தெரிவித்து, அதில் முதலில் வைப்புச் செய்பவர்களுக்கு கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அப்பகுதியைச் சேர்ந்த 150 குடும்பங்கள் பணம் வழங்கியுள்ளன. இதனால் குறித்த வங்கியின் விண்ணப்ப படிவங்களை இன்று தான் கொண்டு வருவதாக தெரிவித்தார்.
இவரின் ஏமாற்று வேலையை அறிந்த அப்பகுதி மக்கள், குறித்த பெண் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்காக நேற்று இரவு சென்ற போது, அங்கு பெண் பொலிஸார் கடமையில் இல்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை குறித்த பெண்ணை பணம் தருகின்றோம் வருமாறு மக்கள் தொடர்புகொண்டு வரவழைத்துள்ளனர். குறித்த பெண்ணும் பணத்தினை வாங்க வந்தபோது அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக