புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கஜினி படத்தின் மூலம் இந்திக்கு சென்ற அசின், அதன்பிறகு கோலிவுட் நடிகர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அங்குள்ள ஷாரூக்கான், சல்மான்கான், அக்சய்குமார் போன்ற பிரபல நடிகர்களை தனது பாக்கெட்டில் இருப்பதால், கோலிவுட் நடிகர்களெல்லாம் அவருக்கு ஹீரோவாகவே தெரியவில்லையாம்.
சமீபத்தில்கூட விஜய் படத்தை இயக்கும் தாண்டவம் இயக்குனர் ஏ.எல்.விஜய் அசினிடம் கால்சீட் கேட்டு மும்பைக்கு சென்றாராம். அப்போது துப்பாக்கிக்கு அப்புறம் விஜய் நடிக்கிற படத்தை நான்தான் டைரக்ட் பண்றேன். அந்த படத்துல நீங்க விஜய்யோட ஆக்ட்டு கொடுத்தா சூப்பரா இருக்கும்னு பீல் பண்றேன் என்று தனது பாணியில் அசினிடம் தமிழ், இங்கிலீஷ் இரண்டையும் கலந்து பொறிந்தாராம்.

 
ஆனால் அதை சுடச்சுட கேட்டுக்கொண்டிருந்த அசின், அவர் பக்கமா திரும்பி, இப்ப அக்சய்குமாரோட கில்லாடி 786 படத்துல நடிக்கிறேன். இதுக்கு அப்புறமா என்னோட நடிக்கிறதுக்கு இரண்டு பெருசு நடிகருங்க க்யூவுல நிக்கிறாங்க. இந்த நேரத்துல நான் கோலிவுட்டுக்கு வந்துட்டா பாவம் இங்க இவங்க ரொம்ப பீல் பண்ணுவாங்க. அதனால் வேற ஏதாச்சும் நடிகைங்கள பாத்துக்கிங்க என்று சொல்லி அனுப்பிவிட்டாராம் அசின். அதையடுத்துதான் தனது ஆஸ்தான நாயகியான அமலாபாலை கமிட் பண்ணியிருக்கிறார் ஏ.எல்.விஜய். ஆனால் அசின் சொல்லி அனுப்பிய இந்த சேதியைக்கேட்டு தளபதி நடிகருதான் ரொம்ப டென்சனாகி விட்டாராம். எங்கூட நடிச்சு வளர்ந்த நடிகை. எனக்கே டேக்கா கொடுக்குதா? ஏத்தம்னு ஒன்னு இருந்தா, இறக்கம்னு ஒன்று இல்லாமலா போகும். அப்ப பாத்துக்கிறேன் என்று அசின் பெயரை தனது டைரியில் குறிச்சி வைச்சிருக்கிறாராம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top