புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மேற்கு வங்காள மாநிலம் மிட்னபூர் மாவட்டத்தில், மஜுர்தியா என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், தன் நிலத்தில் வளர்ந்திருந்த மரத்தை வெட்டியபோது, அது அடுத்த வீட்டு மதில் சுவற்றின் மீது விழுந்தது.

இதனால் அந்த மதில் சுவர் இடிந்ததையடுத்து இரு வீட்டினருக்கும் இடையில் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறை வேடிக்கை பார்த்தவர்கள் இருதரப்பினரையும் சமரசம் செய்தனர்.

பின்னர் நள்ளிரவு நேரத்தில் தங்கள் மதில் சுவர் இடிந்ததால் தகராறு செய்தவரின் வீட்டிற்கு சென்ற 4 பேர், அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதை அவரது மனைவி தடுக்க வந்த போது அவரை கீழே தள்ளிய 4 பேரும் கற்பழித்தனர்.

இது தொடர்பாக பொலிசில் அந்த பெண்ணின் கணவர் புகார் அளித்ததன் பேரில் 2 பேரை பொலிசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள 2 பேர் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரசில் உயர்பதவி வகிக்கிறார்கள்.

எனவே பொலிசார் அவர்களை பிடிப்பதில் அக்கறை காட்டவில்லை என்று புகார் கொடுத்தவர் தெரிவித்துள்ளார்.

அவரைப்போல, நாங்களும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் தான்.

அவர்களின் பதவியை பார்த்து பயப்படாமல் 2 பேரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணின் கணவர் கூறினார்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top