புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தன்னை விட தன் அண்ணன் சூர்யா தான் அழகு என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.திருச்சியில் நடந்த பள்ளி சார்ந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். திருச்சி சிறுகனூர் எம்.ஏ.எம். கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

அகரம் அமைப்பிற்கு இந்த கல்லூரி அமைப்பு சார்பில் உதவிகள் செய்யப்படுகிறது. இது தவிர 10,000 மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவே இங்கு வந்தேன். நான் தற்போது நடிக்கும் பிரியாணி படம் காமெடி, திரில் மற்றும் ஜாலியாக இருக்கும். அகரம் அமைப்பு பல்வேறு இடங்களில் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் எனது ரசிகர்களும் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

அரவாணிகள் துணிச்சலுடன் முன்வந்து வியாபாரம் உள்ளிட்டவற்றை செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கையை ஏற்று 5 அரவாணிகளுக்கு ஜூஸ் கடை வைக்க உதவியுள்ளோம் என்றார்.

அப்போது உங்களை விட உங்கள் அண்ணன் சூர்யா அழகா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,

நிச்சயமாக என்னைவிட சூர்யா தான் அழகு என்றார் தனக்கே உரிய அடக்கத்துடன்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top