சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாக தீமைகள் நடக்கும். இந்த `வளவள’ பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள்.
அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கிறது என்றேத் தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் துவங்குவார். அப்போதும் லபலப என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள்.
சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் துவங்குவார். நண்பர்களிடமும் வளவளவென்று பேசுவது உங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும்.
எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள் அது உங்களுக்கேப் புரியும். எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை. கேட்காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக