தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, தனுஷ் நடித்த மாப்பிள்ளை படம் மூலம்தான் தமிழுக்கு என்ட்ரி ஆனார். அதனால் அவரது முதல் தமிழ் ஹீரோ தனுஷ் என்பதால் இப்போதுவரை அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருந்து வருகிறது. ஹன்சிகாவே தன்னை மறந்தாலும் அவரை மறக்க விடுவதாக இல்லை தனுஷ். அவ்வப்போது போனில் கடலை போடுவதை வாடிக்கையாகச் செய்து வருகிறார். நேரம் கெட்ட நேரங்களில் அவர் போன் போட்டு வறுத்தாலும்கூட வேறு வழியில்லாமல் அவருக்கு போனில் கம்பெனி கொடுப்பதை தொடர்ந்து வருகிறார் ஹன்சிகா.
இந்த நிலையில், களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அடுத்து தான் இயக்கும் சொட்டவாளக்குட்டி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அணுகியபோது, முதலில் கால்சீட் தருகிறேன் என்று சொன்ன ஹன்சிகா, பின்னர் தனுஷ் படத்தின் நாயகன் என்றதும், சும்மாவே கடலை போடுவார், பிசியாக இருக்கிற இந்த நேரத்தில் அவருடன் நடித்தால் அடிக்கடி அல்வா கொடுக்கும் வேலையிலும் இறங்கி விடுவார் என்று அப்படத்தை தவிர்க்க வெவ்வேறு காரணங்களை சொல்லி நழுவிக்கொண்டு வருகிறார் ஹன்சிகா.
இந்த சேதி தனுசின் காதுகளுக்கு சென்றபோது, எனக்கே டேக்கா கொடுக்கிறீயா? என் படத்துக்குள்ள நீ முதல்ல கால்சீட் தரனும் என்று அம்மணியை செல்லமாக கடிந்து கொண்ட தனுஷ், நீ கால்சீட் தருவதாக சொன்னபிறகுதான் படப்பிடிப்பு தேதியே முடிவு செய்வோம். அதுவரைக்கும் டீல்தான் என்று ஹன்சிகாவுக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம். இதனால் தனுசிடம் மீண்டும் சிக்கவா?
0 கருத்து:
கருத்துரையிடுக