புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஒரு தாயின் வெறிச் செயலைப் பாருங்கள். மூன்று இளவயதுக் குழந்தைகளை அவர்களது தாயே நீரில் அமுக்கிக் கொலை செய்த சம்பவம் கியூபெக் மாகாணத்தில் உள்ள டமன்ட்வில் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.



கணவரே பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான முழு உரிமையையும் கொண்டிருப்பதால் பிள்ளைகள் கணவருடன் வசித்து வருகின்றன. பிரிந்து வாழும் இந் தம்பதியில் மனைவி வார இறுதியில் பிள்ளைகளைப் பார்ப்பது வழக்கம்.

கடந்த வருடம் இப்பிள்ளைகளில் மூன்று வயதான பிள்ளை காலை ஏழு மணிக்கு வெறும் காற்சட்டையுடன் வீதியில் சென்றதைக் கண்ணுற்ற அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து பிள்ளைகளின் பாதுகாப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


கடந்த வருடம் நத்தார் பண்டிகை காலத்தில் அப்போது 14 மாதங்களேயான தனது கடைசிக்குழந்தையை பலாத்காரமாக கணவரிடமிருந்து எடுத்துச் சென்றதால் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.


கணவனை விட்டுப் பிரிந்து வாழும் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஞாயிற்றுக்கிழமைகளில் தனது பிள்ளைகளை பார்ப்பதற்கு உரிமையளிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு குழந்தைகள் இவருடன் இருக்கும் போது இந்தப் பெண்ணின் தாயார் மேற்பார்வை செய்ய வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டே குழந்தைகள் விடப்படுவது வழமை.


இவ்வாறு இந்தமுறையும் குழந்தைகள் விடப்பட்ட போது தனது தாயார் வெளியே சென்றிருந்த சமயம் அவர் இந்தக் கொலைகளைச் செய்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்து இவரது முன்னைநாள் கணவர் தெரிவிக்கையில் தனது ஆயுட்காலம் முழுவதும் தனது குழந்தைகளின் நினைவு தன்னை வாட்டியெடுக்கும் எனத் தெரிவித்தார்.

இக் கொலைகளின் பின்னர் மேற்படி பெண் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இதுகுறித்து விபரங்கள் தெரியவரவில்லை. ஆனால் தள்ளுவண்டியில் இப்பிள்ளைகளின் தாயார் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்படுவதை அயலவர்கள் கண்டதாகக் கூறியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top