காதலியை நூற்றுக்கும் மேற்பட்ட முறை கத்தியால் குத்திய காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கனடாவை சேர்ந்த 16 வயது மெல்வின் ஸ்கீட், பிரிட்டானி கிரீன் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இருவரும் பலமுறை வெளியே சுற்றித் திரிந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ஒருநாள் திடீரென காதலி பிரிட்டானியை, மெல்வின் 104 முறை கத்தியால் குத்தினான்.
இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், அன்றைய தினம் அதிகளவு போதைப்பொருளை உட்கொண்டு இருந்ததும், போதை பழக்கத்துக்கு அடிமையானவன் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் மெல்வினுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக