வாடிகனில் ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்ககோரி மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம் நடத்தினர்.
வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கடந்த 13ஆம் திகதி பிரார்த்தனை நடந்தது.
ஏராளமான பொதுமக்கள் திரண்ட இக்கூட்டத்தில், போப் ஆண்டவர் 16ஆம் பெனடிக்ட் கலந்து கொண்டார்.
அப்போது உக்ரைன் பெண்கள் உரிமை அமைப்பை சேர்ந்த பெண்கள் சிலர், தங்களது மேலாடையை களைந்துவிட்டு அரைநிர்வாணமாக மேடையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் உட்பட அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோஷங்களையும் எழுப்பினர்.
"ஓரினச்சேர்க்கையாளர்களை நம்புகிறோம்" போன்ற வாசகங்களையும் தங்கள் முதுகில் எழுதி வைத்திருந்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிசார், போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்களை கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக