கொச்சியில் நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கேப்டன் தோனியின் அதிரடி அரைசதம் கைகொடுக்க, இந்திய அணி, இங்கிலாந்துக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும்
இரண்டாவது ஒருநாள் போட்டி கொச்சியில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணியில் டிண்டா நீக்கப்பட்டு ஷமி அஹமது வாய்ப்பு பெற்றார். இங்கிலாந்து அணியில் பிரஸ்னனுக்கு பதில் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தார்.
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.
இந்திய அணியின் தொடக்க வீரர்களான கம்பீர் 9 ஓட்டங்களும், ரகானே 4 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய ரெய்னா அரைசதம் கடந்து 55 ஓட்டங்களும், யுவராஜ் சிங் 32 ஓட்டங்களும், கோஹ்லி 37 ஓட்டங்களும் எடுத்து ஓரளவு கைகொடுத்தனர்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித்தலைவர் டோனி 7 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ஓட்டங்கள் ஓட்டங்கள் எடுத்தார்.
இவருக்கு நல்ல கம்பெனி கொடுத்த ஜடேஜா தனது 6வது அரைசதத்தை பதிவு செய்தார். 50 ஓவர் முடிவில், இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 285 ஓட்டங்கள் எடுத்தது. ஜடேஜா 61 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஸ்டீவன் பின், டென்பர்க் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 286 ஓட்டங்கள் இலக்குடன் இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக