மிட்நைட் சில்ரன்ஸ் படம் வெளியாகும் போது ஏற்கனவே டெமெஜ் ஆன ஸ்ரேயாவின் பெயர் இன்னும் மோசமாக டேமேஜாகும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது ..காரணம் அத்து மீறிய கவர்ச்சி! இப்படத்தை இயக்கியிருக்கும் தீபாமேத்தா ஏற்கனவே பயர், வாட்டர் போன்ற படங்களில்
சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததை விடவும் இப்படத்தில் இன்னும் பயங்கரமான சீன்களை இணைத்திருக்கிறாராம்.
அதனால் இந்த படம் வெளியாகும்போது ஸ்ரேயாவின் பெயர் பெரிய அளவில் டேமேஜாகும் என்று மும்பை சினிமா வட்டாரம் செய்தி வாசித்திருக்கிறது.
ஆனால் இதுகுறித்து ஸ்ரேயாவிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கும்போது, தீபா மேத்தா சர்ச்சைக்குரிய பயர், வாட்டர் படங்களை இயக்கியவர்தான். ஆனால் மிட்நைட் சில்ரன்ஸ் படத்திலும் அதே போன்ற காட்சிகளை இணைக்கவில்லை.
சில இடங்களில் கதைக்கு அவசியம் என்கிறபட்சத்தில் சற்று கிளாமரான காட்சிகளை வைத்துள்ளார். நானும், உடைகளைந்த நிலையில் நடித்திருக்கிறேன். ஆனால் கதையோடு ஒன்றி அந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு அது ஆபாசமாகவே தெரியாது. அதனால் படம் வெளிவருவதற்கு முன்பே அதை பிரச்சினையாக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக