சீனாவில் கிராமமொன்றில் திடீரென பாரிய துளைகள் தோன்றுவதால், மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.சீனாவில் நிலக்கரி சுரங்கத் தொழில் நடைபெறும் இடங்களில் நிலத்தடி நீர்
முழுவதுமாக வற்றியுள்ளது.
இதனால் வயல்வெளிகளிலும், ஆற்றங்கரை ஓரத்திலும் திடீரென பெருந்துளைகள் தோன்றியுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் ஹுனான் மாநிலத்திலுள்ள லியான்யுவான் கிராமத்தில் 20 துளைகள் தோன்றியுள்ளன, 1200 பேர் வீடிழந்து தவிக்கின்றனர்.
இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துள்ளனர்.
இதன் காரணமாக வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு, இழப்பீடுகளை செய்துதர அரசு ஆலோசித்து வருகிறது.
அளவுக்கு அதிகமாக நிலத்தடிநீர் வற்றியதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக