புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் வருகை அதிகரிப்பதால் மக்கள் தொகையும் உயர்ந்து வருவதாக தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் முதியோர் தொகை அதிகரித்து வருகிறதுடன் குழந்தைகள் மற்றும் இளைஞர் எண்ணிக்கையில் உயர்வு காணப்படவில்லை.

இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் இந்நாட்டின் உழைக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளனர்.

Destatie எனப்படும் மத்தியக்கூட்டரசின் புள்ளியியல் துறை, ஜேர்மனியில் 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் 81.8 மில்லியன் புலம்பெயர்ந்தோர் இருந்தனர்.

ஆனால் ஆண்டின் இறுதியில் இவர்கள் 82.0 மில்லியனாக வளர்ந்து விட்டனர், எனத் தெரிவித்துள்ளது.

எட்டாண்டுகளாகத் தொடர்ந்து சரியத் தொடங்கிய மக்கள்தொகை இந்த 2012ம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கியதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்தோரின் வரவு மட்டுமே.

இந்த ஆண்டு 6,60,000 முதல் 6,80,000 வரை குழந்தைகள் ஜேர்மனியில் பிறந்தன.

அதே சமயம் இந்த ஆண்டின் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,60,000 முதல் 8,80,000 வரை ஆகும்.

ஐரோப்பாவிலேயே மிகவும் குறைந்த பிறப்பு விகிதம் கொண்ட நாடான ஜேர்மனி இருப்பதால் 2060ம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 65 முதல் 70 மில்லியனாகச் சுருங்கிவிடும் என்று புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top