புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவில் செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது செக்கடி குப்பம் கிராமம். இங்கு 160 வீடுகள் உள்ளது. 1200 பேர் வசிக்கின்றனர்
.
விவசாயம் மட்டுமே இவர்களுக்கு தொழில். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் பொங்கல் திருநாளை மட்டுமே கொண்டாடி வருகிறார்கள். தீபாவளி உள்ளிட்ட விழாக்களை இவர்கள் நினைத்து கூட பார்ப்பது இல்லை. திருமண வைபவங்கள் கூட நடந்தால் அதற்காக ஒதுக்கப்பட்ட ராவணே அசுரன் நினைவு மண்டபத்தில் தமிழ் முறைப்படி தான் நடக்கும்.

புரோகிதர்களை அழைப்பது கிடையாது. பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களையே சூட்டுவர். எடுத்துக்காட்டாக கப்பலோட்டிய தமிழன், கனல்மொழி, யாழ்முல்லை, செந்தமிழ், முத்தமிழ் என பெயர் வைக்கப்பட்டு உள்ளன. இந்த கிராமத்தில் பனை மரங்களை அதிகமாக வளர்த்து வருகின்றனர். ஏனென்றால் காகிதம் இல்லாத காலத்தில் பனை ஓலை தான் தமிழ்மொழி வரைய முக்கிய பங்கு வகித்தது. இவற்றை நினைவு கூறும் வகையில் எங்கு திரும்பினாலும் பனைமரங்கள் தான். இந்த கிராமத்தில் குடிபழக்கம் கிடையாது.

தமிழ் பண்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் கிராம மக்கள் தங்களது குழந்தைகளையும் அதன் நெறி தவறாமல் வளர்த்து வருகின்றனர். அதற்காக ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை தமிழ் வழியில் தாய் தமிழ் தொடக்க கல்வி உருவாக்கி நடத்தி வருகின்றனர். பள்ளியில் 60 மாணவ,மாணவிகள் படிக்கின்றனர்.

மேலும் தமிழ் பண்பாட்டை உணர்த்தும் தமிழ் நாடகங்களை சித்திரை, வைகாசி மாதத்தில் நடத்துகின்றனர். இது போன்ற கிராமங்கள் இன்னும் நம் தமிழ்நாட்டில் இருக்கத் தான் செய்கிறது என்பதை பார்க்கும் போது பெருமையாகத்தான் உள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top