புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


காதல் என்ற பெயரில் 16 வயது மைனர் பெண், உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சியில் நடிக்க வைத்திருப்பது
தவறு என மணிரத்னத்துக்கு இயக்குநர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘கடல்’ படத்தில் இளம் புதுமுகங்கள் கவுதமும் துளசியும் உதட்டோடு உதடு பதித்து முத்தக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் காட்சிகள் மீடியாவில் வலம் வருகின்றன. இதற்கு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் காட்சி குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “உதட்டோடு உதடு முத்தக் காட்சி, இளம் வயதினரை தவறாக காட்டுவதோடு, குழந்தைகளிடத்தில் உண்டாகும் பகுத்தறிவுக்கு பொருந்தாத காதல் உணர்வை தோற்றுவித்துவிடும்.
உதாரணமாக, எனது ‘அழகி’ படத்தில் 10 வயது குழந்தைகள் காதல் செய்தால் எப்படி இருக்கும் என்றெல்லாம் கூட காட்சி இருந்தது. குழந்தைகளை காதலர்களாக காட்டுகிற காட்சிகள் பரவாயில்லை.
அவை அறியாமையுடன் கூடியவையாக இருக்கும். ஆனால் தனிப்பட்ட முறையில் குழந்தைகளை அவ்விதம் காட்டுவதை நான் எதிர்க்கிறேன்,” என்றார்.
ஆனால் சம்பந்தப்பட்ட 16 வயது ஹீரோயின் துளசியின் அம்மா, முன்னாள் நடிகை ராதாவோ, “காட்சிக்கு தேவையென்றால் ஹீரோயின்களை இயக்குநர்கள் கதைக்கேற்ப கவர்ச்சியாக காட்டுவதில் தவறில்லை,” என்று கூறியுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top