புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


டொரொண்டோவில் கேசியன் வில்லியம்ஸ் என்ற சிறுவன் தன் வீட்டில் அமர்ந்து டி.வி பார்த்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்டான்.

உடனே இவனை டொரொண்டோவில் உள்ள ஸிக் கிட்ஸ் மருந்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான்.

வில்லியம் அந்த வீட்டில் தன் தாயோடும் தமையனோடும் வசித்து வந்தான்.

கொலை செய்தவா் யார்? கொலைக்கான காரணம் என்ன? போன்றவற்றைப் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்தவர் இந்த வீட்டை கைப்பற்றுவதற்காக இதனைச் செய்திருக்கலாம் என்று பொலிசார் கருதிகின்றனர்.

மேலும் குடியிருப்பின் கண்காணிப்பு கமெராக்களில் கொலைகாரா் முகம் பதிவாகியிருக்கிறதா என்று பொலிசார் ஆராய்கின்றனர்.



தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த வீடு வேண்டும் என்பதற்காக இங்கு குடியிருப்பவர்களை அச்சுறுத்தி விரட்டும் நோக்கத்தில் இந்தக் கொலை நடந்திருப்பதாகத் தெரிகிறது என்றார் பொலிஸ் கண்காணிப்பாளர் ஜார்ஜ் கோயக்கோக்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top