மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி,
காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது.
காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது.
தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார்.
இப்பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகளென்பது பற்றி தங்களுக்கு தெரியாதெனவும் பிரதேசவாசிகள் மேலும் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக