புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உனக்காக நான், எனக்காக நீ என்று பிறவி எடுத்ததுபோன்ற தம்பதியர் இருந்தார்கள். காதல் திருமணம். முதலில் இருவீட்டாரின் எதிர்ப்பு
இருந்தா லும், திருமணமான ஆறுமாதங்களுக்குள் ஒன்றிப்போய்விட்டார்கள். அதற்குப் பிறகுதான் மாப்பிள்ளையின் பெருமை பெண்வீட்டார்களுக்குத்
தெரிந்தது. மருமகளின் பெருமை பையன் வீட்டார்களுக்குத் தெரிந்தது இருவருக்கும் ஒரு அசத்தலான பெயர் பொருத்தம் இருந்தது.

அவன் பெயர் சோமசுந்தரம். அவள் பெயர் மீனாட்சி!. அதுவா முக்கியம்? அதைவிட முக்கியமாக தம்பதியர் இருவரும் அன்பாக அன்னியோன்யமாகக் குடும்பம் நடத்தினார்கள். ஒருவருக்காக ஒருவர் உருகினார்கள்.ஒரு பெண் குழந்தையும் பிறந்தது எல்லாமே சரியாக இருந்துவிட்டால் கதையை எப்படி நகர்த்துவது? ஒரே ஒரு குறை இருந்தது. சோமு என்ற சோமசுந்தரம் 'அந்த' சமாச்சரத்தில் அதீத இச்சை உடையவன் அதிகாலை, மதியம். முன்னிரவு என்ற காலக்கணக்கில்லாமல் தன்னை சந்தோஷப் படுத்தச் சொல்வான்.

அவளும் மனம் கோணாமல் எப்போது அவன் படுக்கைக்கு அழைத்தாலும் ஒத்துழைப்பாள். யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை. சோமு ஒரு நாள் அவன் பொறியாளராக வேலை பார்த்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்து விட்டான். அவன் இறந்தபோது அவனுக்கு வயது முப்பதுதான். மீனாட்சி அவ¨னிவிட இரண்டு வயது இளையவள் எப்படி இருக்கும் மீனாட்சிக்கு? நொருங்கிப்போய்விட்டாள் யாராலும் அவளுக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை! ஆனாலும் காலதேவன் ஒரு மருந்து வைத்திருக்கிறான். அதுதான் மறதி. மெல்ல மெல்ல அவளுடைய துக்கம் ஆறிவிட ஒருவருடத்திற்குள் அவள் பழைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டாள்.

அவளுடைய குழந்தை அவளுக்கு ஆறுதலையும், மகிழ்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்துக் கொண்டிருந்தது! அப்படியே ஒரு இருபது வருடங்கள் ஓடிப்போனது தெரியவில்லை! ஒரு சமயம் திருவண்ணாமலையில் அவள் ஒரு சித்தரைச் சந்தித்து வணங்கி, தன் கதையைச் சொல்லி அழுதாள். அவர் அவளுக்குப் பிறப்புக்களைச் சொல்லி சமாதானம் செய்தார். அவளுக்கு ஓரளவு இறப்பு, மறு பிறவிகள் மேல் நம்பிக்கை ஏற்பட்டது! இறந்துபோன தன்னுடைய கணவன் இப்போது மறுபிறவி எடுத்து எங்கே இருப்பான் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அவளுக்கு ஏற்பட்டது.

 அதை அவள் அவரிடம் சொன்னாள். உடனே அவர் புன்னகையுடன் இரண்டு வெள்ளிக் கிண்ணங்களை, தன் ஆசிரம அலமாரியில் இருந்து எடுத்துக் கொடுத்தார். கொடுத்ததோடு சொன்னார். "இதை நீ உன் காதுகளில் வைத்துக் கொண்டு, மனம் உருகி இறைவனைப் பிரார்த்தனை செய்தால், உன் கணவனுடைய ஆத்மாவுடன் தொடர்பு கிடைக்கும். நீ மனதில் என்ன கேட்க நினைக் கிறாயோ அதை மனதிலேயே நினைத்துக் கொண்டால், அவன் உன்னுடன் பேசுவான், அது உன் மனதிற்கு மட்டும் கேட்கும்.போய் பேசிவிட்ட வா" என்றார் அவள் உற்சாகமாக எழுந்து சென்று கொஞசம் தள்ளி இருந்த அரச மரத்து நிழலில் அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.

"என்னங்க நான்தான் உங்களுடைய மீனாட்சி பேசுகிறேன். என்னோடு பேசுங்களேன்...." மனம் உருகிச் சொன்னாள். என்ன ஒரு ஆச்சர்யம், காதில் அவளுடைய கணவனின் குரல் தேனாக ஒலித்தது. "என்னடி செல்லம் நல்லாயிருக்கியா?" "இருக்கிறேன். நன்றாக இல்லை. நடைப்பிணமாக இருக்கிறேன்" "கவலைப் படாதே.கடவுளை வேண்டிக்கொள். மீன்டும் ஒரு பிறவியில் நாம் மறுபடியும் இணவோம்!" "அதற்கு எவ்வளவு நாளாகும்?" "யாருக்குத் தெரியும்? எவ்வளவு நாளாலென்ன? உன்னைப்போல ஒரு உத்தம மனைவி கிடைக்க நான் எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் காத்திருப்பேன்" அவள் குளிர்ந்துபோய் விட்டாள்.

மனது காற்றில் பறக்க ஆரம்பித்தது. உடனே பழைய சம்பவங்கள் மனதில் மின்னலாய்த் தோன்ற அவள், ஒரு குறுகுறுப்புடன் கேட்டாள்: "அந்த' சமாச்சாரம் இல்லாமல் ஒரு நாள் கூட இருக்க மாட்டீர்களே? இப்போது அது தடையின்றிக் கிடைக்கிறதா?" "ஆகா, ஒரு நாளைக்குப் பத்து முறை!" நாளொன்றுக்குப் பத்து முறைகளா? எப்படி சாத்தியம்? வியப்போடு கேட்டாள்:" பத்து முறை எப்படி சாத்தியம்? பொய் சொல்லி விளையாடுகிறீர்களா?" "இல்லடி செல்லம் உண்மையைத்தான் சொல்கிறேன். இப்போது நான் முயலாகப் பிறந்துள்ளேன்.

 ஒருவனுடைய பிறவி அபிலாஷைகள் தீராமல், அறைகுறை வயதில் இறந்தால், அந்த வினைப் பயன் தீரும் வரை, அவன் அதற்குத் தகுந்தபடி பல பிறவிகளை எடுத்துக் கொண்டே இருப்பான் என்பது தான் பழைய கூற்று. அதானால்தான் பெரியவர்கள் சொல்வார்கள் தர்மத்தின் மேல், இறைவன் மேல் அதிக ஆசை வை. சிற்றின்பங்களின் மேல் அதிக ஆசை வைக்காதேயென்று!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top