கிளிநொச்சியில் பிரதி அதிபர் ஒருவர் லேகியத்தை சாப்பிட்டு மனைவியை வெட்ட சென்ற கொடூரம்
கனகபுரம் பகுதியில் லேகியத்தைச் சாப்பிட்டதால் போதை தலைக்கேறிய பிரதி அதிபர் ஒருவர் ஆசிரியையான தனது மனைவியை வெட்டுவதற்கு துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கிளிநொச்சி-கனபுரத்தில் நேற்றிரவு பரபரப்பு
ஏற்பட்டது. ஆயினும் ஊர் மக்கள் சேர்ந்து துரிதமாகச் செயற்பட்டதால் மனைவி காப்பாற்றப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கல்வி வலயத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் பிரதி அதிபராக உள்ள மேற்படி நபர் முரண்பாடு காரணமாக தனது மனைவியைப் பிரிந்திருந்தார். அடிக்கடி இவர்கள் இருவருக்கிடையேயும் முரண்பாடுகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் லேகியத்தைச் சாப்பிட்ட மேற்படி பிரதி அதிபர் தனது மனைவி தங்கியிருந்த இடத்திற்கு கத்தியுடன் சென்று அவரை வெட்டுவதற்குத் துரத்தியுள்ளார். அவர் அலறியடித்துக்கொண்டு ஓடியதால் விழிப்படைந்த ஊரவர்கள் மனைவியைத் துரத்திய கணவரான அதிபரை மடக்கிப் பிடித்தனர்.
இந்த விடயம் குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை குறித்த பிரதி அதிபரைக் கைதுசெய்து கொண்டு சென்றனர்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயற்படக்கூடிய மேற்படி பிரதி அதிபரின் செயல் குறித்து ஊர் மக்கள் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக