புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தின் வடக்கு வேல்ஸ் பகுதியில், வா மீன் பார்க்கலாம் என்று கூறி 6 வயது சிறுமியை குளத்திற்குக் கூட்டிச் சென்ற 11 வயது சிறுவன் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து
விட்டான். வடக்கு வேல்ஸின் வேயன்டட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பள்ளிச் சிறுவன், தனது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் 6 வயது சிறுமியை பக்கத்தில் உள்ள குளத்திற்குப் போய் மீன் பார்க்கலாம் என்று கூறி அழைத்தான். அதன் பின்னர் அச்சிறுமியை தனது வீட்டுக்கு அருகே கூட்டிப் போய் தனிமையான இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டானாம். இதையடுத்து அச்சிறுவனை போலீஸார் கைது செய்தனர். அவன் மீது 3 குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அச்சிறுவனுக்கு டாக்டர் மூலம் மன நல ஆலோசனை தரப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணை மார்ச் மாதத்திற்குத்தள்ளி வைக்கப்பட்டது. மேலும் சிறுவனுக்கு ஜாமீனும் அளித்துள்ளது கோர்ட்.!

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top