கிளி-வட்டக்கட்சியில் மகளை தாயாக்கிய சிறிய தந்தை கைது
கிளிநொச்சி - வட்டக்கட்சி பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமி சிறிய தந்தையால் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்த நிலையில் உள்ளதாக யாழ். பிராந்தியப் பிரதிப்
பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இச்சம்பவம் தொடர்பாக அவர் கூறியதாவது,
40 வயதுடைய சிறிய தந்தை 15 வயது நிரம்பிய சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் சிறுமியின் வயிற்றில் கரு உருவாகியுள்ளது. இந்தக் கருவினைக் கலைப்பதற்காக வைத்தியரை நாடிய போது சிறிய தந்தை கையும் களவுமாக கிளிநொச்சி பொலிஸாரிடம் மாட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள 40 வயதுடைய சிறிய தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
0 கருத்து:
கருத்துரையிடுக