தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுவன் அந்த சேலையில் கழுத்து நெரிபட்டு உயிரிழந்துள்ளான்
.
நிவித்திகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் (24) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சிறுவன் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அன்றைய தினம் பாடசாலைக்குச் செல்லவில்லை.
சிறுவனின் தாயும் தந்தையும் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
முற்பகல் 11 மணியளவில் சிறுவனின் தாயார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, சிறுவன் கழுத்தில் சேலை சுற்றப்பட்ட நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சிறுவன் வழமையாக சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவதாகவும், தான் பல முறை எச்சரித்ததாகவும் சிறுவனின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவனின் கழுத்தை சேலை இறுக்கியமையின் காரணமாகவே இவ் உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக மரண பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக