சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் இரயிலில் நிர்வாண நடனம் ஆடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு கேரளா எர்ணாகுளம் அருகே குறித்த இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணி ஒருவர் திடீரென தன் ஆடைகளை களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்தார்.
நள்ளிரவு என்பதாலும் பலர் தூக்கத்தில் இருந்ததாலும் உடனடியாக யாரும் இதை கவனிக்கவில்லை.
பின் அந்த வாலிபர் நிர்வாண நிலையிலேயே நடனம் ஆடினார்.
அந்த நேரத்தில் கழிப்பறைக்கு செல்வதற்காக எழுந்த பெண் பயணி ஒருவர், இவரின் கோலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார்.
அவரின் சப்தத்தை கேட்டு விழித்தெழுத்த மற்ற பயணிகள் இவரின் அலங்கோல நிலையைப் பார்த்து திகைப்படைந்தனர்.
உடன் ஆண் பயணிகள் சிலர் அந்த வாலிபரை பிடித்து ஆடைகளை உடுத்தச் சொல்லி அமர வைத்தனர். ரயில் குருவாயூர் சென்றடைந்ததும் அவரை பொலிசில் ஒப்படைத்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், குறித்த அந்த வாலிபர் கொல்லம் நகரை அடுத்த கொட்டாரக்கராவை சேர்ந்த பிஜு என்பவர் என தெரியவந்தது.
அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக