பேஸ் புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் சென்னை பெண்ணுக்கு தாலி கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிய ராணிப்பேட்டை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்தவர் தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் ராணிப்பேட்டை பெல் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவருக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் ராணிப்பேட்டை, சென்னையில் சந்தித்து பேசி உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் 26ம் தேதி சதீஷ்குமார், தேவியை காரில் ராணிப்பேட்டைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் தங்க வைத்த அவர், Ôகண்டிப்பாக திருமணம் செய்துகொள்கிறேன்Õ என ஆசை வார்த்தை கூறி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.
இதற்கு இளம்பெண் மறுக்கவே உடனடியாக தன் கையில் தயாராக வைத்திருந்த மஞ்சள் கயிற்றை அவரது கழுத்தில் கட்டிவிட்டு உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் சதீஷ்குமார் தேவியுடனான தொடர்பை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து தேவி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அதில் 'பேஸ் புக்' மூலம் பழகி திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மாற்றப்பட்டு, அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் போலீசார் நேற்று முன்தினம் சதீஷ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
0 கருத்து:
கருத்துரையிடுக