பழனியில், பட்டாளத்து தெருவில் வசிப்பவர் முருகானந்தம். இவரது மனைவி கலாவதி(வயது 32). இவருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகிறது. கலாவதிக்கும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி
மகன் முருகேசன் என்பவருக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.
இதுபற்றி அறிந்த முருகானந்தம் மனைவியிடம் கள்ளக்காதலை விட்டுவிடுமாறு கூறினார். இதனால் கணவன்-மனைவிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை வழக்கம் போல் முருகானந்தம் வேலைக்கு சென்று விட்டார். அந்த சமயத்தில் கலாவதி தனது கள்ளக்காதலன் முருகேசனை வரவழைத்து அவருடன் உல்லாசமாக இருந்தார். அப்போது வேலை முடிந்து வீடு திரும்பிய முருகானந்தம், மனைவி கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருப்பதை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
முருகானந்தத்தை பார்த்ததும் முருகேசன் பின்பக்கம் வழியாக தப்பியோடி விட்டார். மனைவியின் செயலை கண்டு ஆத்திரம் அடைந்த முருகானந்தம் கத்தியால் கலாவதியை சரமாரியாக குத்தி விட்டு ஓடிவிட்டார். இதில் தலை, வயிறு பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பழனி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிவு செய்து மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவான முருகானந்தை தேடி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக