புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துருக்கி நாட்டு விமானத்தின் மீது, மின்னல் தாக்கியதில் இன்ஜினில் தீப்பிடித்தது. இதனால், பயணிகள் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. துருக்கி நாட்டின்
இஸ்தான்புல் நகரிலிருந்து, இஸ்மிர் என்ற நகருக்கு, 114 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது, மின்னல் தாக்கியது. இதில், விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது.இதையடுத்து, இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீப்பற்றிய விமானத்திலிருந்து, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மின்னல் தாக்கிய இன்ஜினில் தீப்பொறி பறக்கும் காட்சியை விமானத்தில் இருந்த பயணி ஒருவர் ஜன்னல் வழியாகப் படம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top