அழகையும் பெண்களையும் பிரிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு விதத்தில் அழகுதான். பதின் பருவத்தில் உடலின்
அங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடங்கி நரைகூடிய பருவம் வரை பெண்கள் ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு வித அழகுடன் காட்சியளிக்கின்றனர்.
தங்களின் அழகை மேலும் அதிகரித்துக்கொள்வதற்காக அழகுசாதனப்பொருட்களையும் வாங்கி குவிக்கின்றனர். தங்களின் 28 வயதில்தான் பெண்கள் அதிக கவர்ச்சியாக உணர்கின்றனராம். அதேசமயம் 32 வயதில் அவர்களின் தன்னம்பிக்கை மிளிர்கின்றதாம்.
பெண்கள் எந்த வயதில் தங்களை அதிக அழகாக, கவர்ச்சியாக உணர்கின்றனர் என்பது பற்றி இங்கிலாந்தில் பெண்களுக்கான அழகு சாதன பொருட்களை விற்பனை செய்யும் ஒரு தனியார் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியது. 2 ஆயிரம் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பெண்களின் ஆசைகள் மற்றும் அவரது விருப்பங்கள் குறித்து கருத்து கேட்கப்பட்டது. கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பெரும்பாலான பெண்களின் தங்களின் 28 வயதில்தான் அதிக கவர்ச்சியாக உணர்வதாக தெரிவித்துள்ளனர். 28 வயதில் தங்களது இடை மற்றும் இடுப்பு பகுதி மிகவும் மெலிந்து இருப்பதால் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த வயதில்தான் கண்களும், மிக அழகாக ´பளிச்´ என உள்ளது என 23 சதவீத பெண்கள் கருதுகின்றனர். அதே நேரத்தில் 32 வயதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றம் கூறினார். ஏனெனில் அப்போதுதான் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அதிகம் கிடைப்பதாகவும் தெரிவித்தனர்.
உறுப்புகள் குறித்த கேள்விகளுக்கு, தங்களின் மார்பகங்கள் அழகாக இருப்பதை விரும்புவதாக 20 சதவீதம் பேரும், கால்கள் மெலிந்து நீளமாக அழகாக இருப்பதை விரும்புவதாக 41 சதவீதம் பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம் புத்திசாலித்தனத்திற்கு ( மூளைக்கு ) 13 சதவிகித பேர் மட்டுமே ஆதரவாக கருத்து கூறியுள்ளனர். உடை அலங்காரம், ஹேர்ஸ்டைல்ஸ், மேக்அப், ஹீல்ஸ் என ஒவ்வொன்றிர்க்கும் தனிகவனம் எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் தங்களை கவர்ந்ததாக 19 சதவிகிதம் பேரும், ஆலிவுட் நடிகை மர்லிமன்றோ அழகு ஈர்த்ததாக 15 சதவிகிதம் பேரும் கவிஞர் புளோரன்ஸ் நைட்டிங்கேல் கவர்ந்ததாக 17 சதவீதம் பேரும் கூறியுள்ளனர்.
வாழ்க்கைத்துணை பற்றிய கேள்விக்கு ஒரே துணைவருடன் நீண்டநாட்கள் வசிக்க விரும்புவதாக கூறியுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக