புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழகத்தில் இளம் பெண் ஒருவரை கடத்த முயன்ற போலி சாமியாருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரசாதத்தில் மயக்க மருந்து கொடுத்து குறித்த பெண்ணை, சாமியார் கடத்த முயன்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் அருகே உள்ளது பெரியகுளம் என்ற கிராமம். இந்த கிராமம் மலை அருகே வனப்பகுதியையொட்டி உள்ளது.

இங்கு தோவாளய மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று மாலை வழக்கம்போல் சிறப்பு பூஜை நடந்தது. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் ஒரு சாமியார் அங்கு வந்தார்.

வந்தவுடன் சிறப்பு பூஜை செய்யவேண்டும் என்றார். ஊர் மக்களும் அனுமதி கொடுத்தனர். பூஜை முடிந்ததும் அங்கு இருந்த பக்தர்களுக்கு அந்த சாமியார் பிரசாதம் கொடுத்தார்.

அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண் உறவினர் சகிதம் கோவிலுக்கு வந்திருந்தார். இவர்களுக்கும் பிரசாதத்தை அந்த சாமியார் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் பிரசாதம் சாப்பிட்ட குறித்த பெண் உள்ளிட்ட,  ஐந்து பேரும் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர். இதன் பிறகு அந்த போலி சாமியார் அவர்களுடன் வந்த இளம்பெண்ணை கடத்த முயன்றார்.

தன்னை கடத்த முயற்சி நடப்பதை அறிந்த அந்த இளம்பெண் கூக்குரலிட்டாள். அவரது அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

அப்போது அந்த இளம்பெண்ணை சாமியார் வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதை கண்டு திடுக்கிட்டனர். போலி சாமியாரை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் கோவில் உள்ளேயே இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கடத்த முயற்சித்த அவருக்கு தர்மஅடி கொடுத்தனர்.

பிறகு அந்த போலி சாமியாரை பொதுமக்களும், பக்தர்களும் சத்தியமங்கலம் பொலிசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் பெண்ணை கடத்த முயன்ற போலி சாமியார் பெயர் உத்தமராஜ் என்றும்,கர்நாடக மாநிலம் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top