புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தம்புள்ளை பகுதியில் வானிலிருந்து இனந்தெரியாத திண்மப் பொருளொன்று வீழ்ந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


குறித்த பொருள் புவக்அத்தாவலை சமன்தலாயாய பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை விழுந்துள்ளது.

குறித்த வீட்டார் செய்தியாளர் மூலம் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

வானிலிருந்து வீழ்ந்த குறித்த திண்மப் பொருள் கருப்பு மற்றும் மஞ்சள் நிறங்களை கொண்டிருப்பதாக சம்பவ இடத்திற்கு சென்ற தம்புள்ளை நகரசபைத் தலைவர் சாலிய ஓபான தெரிவித்தார்.

தம்புள்ளை பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஏற்கனவே, அரலகங்வில பகுதியில் வீழ்ந்த விண் மர்மப் பொருளை போன்றே இதுவும் இருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top