தலைப்பைச் சேருங்கள் |
உலகில் மிக நீளமான பூனை என்ற கின்னஸ் சாதனை புரிந்த பூனையானது புற்றுநோய்க் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வசித்து வந்த எட்டு வயதுடைய ஸ்டீவ் என்ற பூனையே இவ்வாறு உயிரழிந்துள்ளது.
மூக்கு முதல் வால் வரை 45.8 அங்குல நீளமுடைய இப்பூனையானது கடந்த 2010 ஆம் ஆண்டு உலகில் மிக நீளமான பூனை என்ற கின்னஸ் சாதனை படைத்திருந்தது.
இப்பூனை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
'ஸ்டீவ் எப்போதும் சுமூகமாக பழகக்கூடியது. புதியவர்களை சந்திக்கும்போது அன்பாக பழகும்.
அது அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனை நினைத்து நான் பெறுமையடைகிறேன்' என ஸ்டீவின் உரிமையாளர் ரொபின் ஹென்ரிக்ஸன் தெரிவித்துள்ளார்.
'ஸ்டீவ் சான்றிதழ் அளிக்கப்பட்ட விலங்கு. அது ஓய்வுபெற்றுவிட்டது' என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஸ்டீவின் முகதளப் பக்கத்தில் அநேகமான பார்வையாளர்கள் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக