என்னதான் நடிகைகள் வளர்ந்து அடுத்த கட்டத்துக்கு போனாலும், கிசுகிசுக்களில் சிக்கி சின்னா பின்னமாகின்றனர். தற்போது அந்த சிக்கலில் மாட்டியிருப்பவர் நடிகை அஞ்சலி. மளமளவென்று
படங்கள் குவிந்தவுடன் அவரைச் சுற்றி தினம் ஒரு கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது. அஞ்சலி ரியாக்ஷ்ன் என்னவாக இருக்கும்? இதோ அவரே பேசுகிறார். விரைவில் ஆர்யாவுடன் நான் நடித்த சேட்டை படம் வெளிவர இருக்கிறது. அதை அடுத்து விஷாலுடன் மதகஜராஜா படம், தொடர்ந்து முருகதாஸின் தம்பி ஹீரோவாக நடிக்கும் வத்திக்குச்சி படம், இந்த படங்களுக்கு பிறகு தமிழில் எந்தபடமும் ஒப்புக்கொள்ளவில்லை.
தெலுங்கில் பெரிய பெரிய படங்களாக நடித்து வருகிறேன். சமீபத்தில் வெங்டேஷ் மற்றும் மகேஷ்பாபுவுடன் நடித்த படங்கள் ரிலீஸாகி நல்ல பெயரை தந்துள்ளது. இதை தொடர்ந்து ரவிஜேதாவுடன் பல்லுபு என்ற படத்தில் நடிக்கிறேன். பல்லுபு என்றால் திமிரு அதிகம் உள்ளவள் என்ற அர்த்தமாம். அடுத்தடுத்தும் நல்ல கதைகள் தெலுங்கில் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார். மேலும் தன்னைப் பற்றி மீடியாக்கள் எழுதும் கிசுகிசுவால் தான் ரொம்பவே வருத்தத்தில் இருப்பதாகவும் அஞ்சலி கூறியுள்ளார்.
தெலுங்கில் ரொம்ப பிஸியாக இருப்பதால், அங்கு ஒரு ரவுண்ட் முடித்த பின்பு தான் தமிழுக்கு வருவார் எனத் தெரிகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக