உடுகம - தேவகிரி தோட்ட வீடொன்றில் திருடிவிட்டு கொழும்பு நோக்கி தப்பிச் சென்ற ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உடுகமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகள் பஸ்ஸில் இவர்கள் சென்று கொண்டிருப்பதாக உடுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து இன்று (12) அதிகாலை பஸ் ஒன்றை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
அப்போது பஸ்ஸுக்குள் இருந்த ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து திருடப்பட்ட தங்க நகைகள், பணம் ஆகியவையும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கத்திகள் உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
உடுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக