நியூசிலாந்து பெண்ணின் கோகோ கோலா குடிக்கும் பழக்கம் அவரது உயிரை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதியை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ். 30 வயதான இவர் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோகோ கோலா குடித்து வந்துள்ளார்.
இருதய நோயால் முதலில் பாதிக்கப்பட்ட நடாஷா சமீபத்தில் மரணமடைந்தார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
உடலில் அளவுக்கதிகமாக கோகோ கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது.
கோகோ கோலா உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக