புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகளை, மனைவியாக்கி குழந்தை பெற்ற நபர் ஒருவர் இரண்டாவது மகளையும் துரத்திய போது, பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரை சேர்ந்த கூலி தொழிலாளி பாண்டி, 40. இவரது முதல் மனைவி, பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டார்.

இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். 2வது மனைவியும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

பாண்டி தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் கொடைக்கானல், வத்தலக்குண்டு, பழனி போன்ற ஊர்களுக்கு இடம் பெயர்ந்து, நாடோடி வாழ்க்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில், 21 வயதான தனது மூத்த மகளையே, மூன்றாவது மனைவியாக்கி, அவருடன் உறவு வைத்துக் கொண்டார்.

இவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு, தற்போது இரண்டரை வயதாகிறது. தற்போது, பாண்டி கூடலூரில் ஒரு தோட்டத்து வீட்டில், குடும்பத்துடன் தங்கியிருந்து, வேலை செய்து வந்தார்.

அங்கு 14 வயதான தனது 2 வது மகளுடன் (இரண்டாவது மனைவியின் மகள்) உறவுகொள்ள முயன்றார்.

அவர், அங்கிருந்து தப்பி, எரசக்க நாயக்கனூரில் உள்ள அத்தை (பாண்டியின் அக்கா) வீட்டிற்கு சென்றார்.

அங்கும் சென்று பாண்டி, மகளுடன் உறவுகொள்ள முயன்றுள்ளார். இதை தடுத்த பாண்டியின் அக்காளும், பொதுமக்களும் சின்னமனூர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

பொலிசார் பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top