நடிகரும், மத்திய அமைச்சருமான நெப்போலியனுக்கு நேற்று இரவு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு நெல்லை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தசை திறன் குறைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மயோபதி சிகிச்சை மையத்தை அவர் நெல்லையில் நடத்தி வருகிறார். இங்கு நெப்போலியன் மாதந்தோறும் வருவார்.
நேற்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் நெப்போலிஅன் வந்தார். பிறகு அங்கிருந்து தனது மயோபதி சிகிச்சை மையத்திற்கு வீரவநல்லூருக்கு காரில் வன்டு கொண்டிருந்தார்.
அப்போது கோவில்பட்டியை கடந்து வந்தபோது நெப்போலியனுக்கு திடீர் வாந்தி, தலைச் சுற்றல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.
உடனடியாக அவர் நெல்லையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஈ.சி.ஜி, ரத்தப்பரிசோதனை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. எம்.ஆர்.ஐ. எடுக்க அவர் பரிசோதனை மையத்துக்குக் கொண்டு சென்றபோது கூட மயக்கத்தில்தான் இருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்கேன் முடிந்து மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஷயம் கேள்விப்பட்டவுடன் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0 கருத்து:
கருத்துரையிடுக