புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தனது மனைவியுடன் தகாத உறவை வைத்திருந்ததாக கூறப்படும் நபரை குறித்த பெண்ணின் கணவன் அடித்துக்கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் ஹிதோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆமனே பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் இரும்புக்கம்பியினால் தாக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார். 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியுடன் தகாத தொடர்பைக் கொண்டிருந்ததாக கூறப்படும் நபர் சம்பவதினம் மாலை வேளையில் வீட்டுக்குள் இருந்துள்ளார். அதேநேரத்தில்  குறித்த பெண்ணின் கணவரும் வீட்டுக்கு வந்துள்ளார்.

சந்தேக நபர் வீட்டில் இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த கணவன்  கையில் கிடைத்த இரும்புக்கம்பியினால் சந்தேகநபரை  தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், குறித்த பெண்ணின் கணவனை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top