இடது கை அகற்றப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொழும்பு சட்டப்பீட மாணவி அஷச்சலாவுக்கு வெலிக்கடை சிறைச்சாலையில்
தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் உதவி செய்துள்ளனர்.
சுதந்திர தினமான இன்று வெலிக்கடை சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் கைதிகளுக்கென பகல் மற்றும் இரவு நேரத்திற்கு ஒதுக்கப்பட்ட 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாவையே குறித்த மாணவிக்கு கைதிகள் கொடுத்துள்ளனர்.
கைதிகளின் கடுமையான வேண்டுகோளின் அடிப்படையிலேயே மாணவின் தந்தை மற்றும் சகோதரியிடம் அதற்கான காசோலை கையளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர் கொடிபிலி தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்தே குறித்த காசோலை கையளிக்கப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக