யாழ். நெல்லியடியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளனர்.
நெல்லியடியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பேரின்பராஜா (வயது -50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். நெல்லியடி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள தனது வீட்டின் முன் நின்ற மாமரத்திலேயே இவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் நெல்லியடி பொலிஸாரினால் மீட்கப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக