குடிப்பழக்கத்தை நிறுத்தும் புதிய மருந்து ஒன்றை, சிலி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது நடைமுறைக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களால், அதை அவ்வளவு எளிதாக
விட்டுவிட முடிவதில்லை. இதனால், இது ஒரு சமூக பிரச்னையாகவே கருதப்படுகிறது. ஆனால், ரசாயன மாற்றத்தால் ஏற்படும் இந்த தூண்டுதலை, ரசாயனம் கொண்டே சரி செய்துவிடலாம் என்கிறார், சிலி நாட்டை சேர்ந்த ஆசின்ஜோ என்ற ஆராய்ச்சியாளர்.இந்த புதிய மருந்தை, ஊசி மூலம் உட்செலுத்தப்படும் பட்சத்தில், அதன் தாக்கம் குறைந்தபட்சம், ஆறு மாதம் முதல், ஒரு ஆண்டு வரை, நம் உடலில் நிலைத்திருக்கும். எனவே, மது குடிக்க வேண்டும் என்ற தூண்டுதலை இது பெருமளவில் தடுத்துவிடுகிறது.
அதையும் மீறி, மது குடிக்கும் பட்சத்தில், வாந்தி, மயக்கம், நெஞ்சு எரிச்சல், உடல் பலகீனம் போன்றவை ஏற்படும்.இந்த மருந்து செயல்படும் விதம் குறித்து, இந்தியாவிலும் விரைவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சோதனை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அடுத்த இரண்டு ஆண்டுகளில், இந்த மருந்து சந்தையில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு, ஆசின்ஜோ கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக