புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மகளை கற்பழித்துக் கொலை செய்த மதபோதகருக்கு குறைவான தண்டனை கொடுக்கப்பட்டதற்கு சவூதி அரேபிய பெண்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டில் தலை மற்றும் கையில் காயங்கள் மற்றும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தாள்.

இது குறித்த விசாரணையில் தன் மகளை சித்ரவதை செய்து கொலை செய்ததாக தந்தை பாய்ஹான்-அல்-காம்தி என்பவர் ஒப்புக்கொண்டார்.

இந்த வழக்கில் பெண்ணின் தாயான, தன் மனைவிக்கு அவர் ரத்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இதுவரை அவர் சிறையிலிருந்த காலமே போதுமானது என சவூதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இஸ்லாமிய சட்டங்களின் படி, தன் சொந்த குழந்தைகளை கொலை செய்த தந்தை மற்றும் மனைவியை கொலை செய்த கணவனுக்கு தண்டனை ஏதும் விதிக்கப்படாது.

அதற்கு பதிலாக கொலையாளி, கொல்லப்பட்டவரின் நெருங்கிய உறவினருக்கு இழப்பீட்டு தொகையாக பணம் வழங்க வேண்டும்.

இது "ரத்த இழப்பீடு" என்று அழைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு சவூதி மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top