புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சிறுமி ஒருவர் உறவினர்களினால் தீயினால் சுடப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் கிளிநொச்சி பிரதேச பரந்தன், குமரபுரம் பகுதியில்  இடம்பெற்றுள்ளது.

 தாய் தந்தையரை இழந்து உறவினரால் பராமரிக்கப்பட்டு வந்த சிறுமி ஒருவரே தீயினால் சுடப்பட்டு புண்படுத்தித் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுமி தீயினால் சுடப்பட்டுக் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இவர் தற்போது சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சிறுமியின் அவலநிலை குறித்து அறிந்த சிறுவர் நன்னடத்தை அதிகாரி இவரைச் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இணைத்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top