புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சரகோட்டா நகரில் வசித்துவருபவர் ஈஷா கரே(18) . இவர் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஆவார். இக்காலகட்டத்திற்கு ஏற்றவாறு இவர்
கண்டுபிடித்துள்ள 20 வினாடிகளில் செல்போனை சார்ஜ் செய்யக்கூடிய சாதனம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதற்காக, ஈஷாவிர்க்கு இண்டெல் அறக்கட்டளையின் 'இளம் விஞ்ஞானி விருது' மற்றும் 50,000 அமெரிக்க டாலர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய செல்போனின் பாட்டரி அடிக்கடி சார்ஜ் செய்யும் நிலை ஏற்பட்டதே தன்னுடைய இந்த கண்டுபிடிப்பிற்கு தூண்டுகோலாக இருந்தது என்று குறிப்பிடும் ஈஷா,இக்கண்டுப்பிடிப்பின் மூலம் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான கூகுளின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

ஈஷா கண்டுபிடித்துள்ள இந்த சிறிய சாதனத்தின் செயல்பாடுகள் மிகவும் திறன்வாய்ந்தததாக இருப்பதும், சாதரணாமாக 1000 முறை பயன்படுத்தக் கூடிய பாட்டரிகளைப் போல் இல்லாமல், இக்கருவியை கொண்டு 10,000 முறை சார்ஜ் செய்ய முடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.




 
Top