புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


thumbnailஐ.பி.எல். கிரிக்கெட்டின் பிளே ஆப் சுற்றின் முதல் ஆட்டம் டெல்லியில் இன்றிரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்
செய்ய தொடங்கியது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்கரர்களாக மைக் ஹசி மற்றும் விஜய் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினர். இவர்கள் ஜோடியில் சென்னை 52 ரன்கள் எடுத்தது. விஜய் 23 ரன் இருக்கும் போது, பொல்லார்ட் வீசிய பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

பின்னர் வந்த ரெய்னா, ஹசியுடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். ரெய்னா 42 பந்தில் 82 (5 பவுண்டரி, 5 சிக்சர்) ரன்கலும், ஹசி 58 பந்தில் 86 ரன்கலும் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை விளையாடினர்.

இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்தது.

அணியில் அதிகபட்சமாக ஹசி 86 ரன்கள் எடுத்தார்.

193 என்ற கடினமான வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஸ்மித் மற்றும் தரெ களமிறங்கினர். தரெ 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த தினேஷ் கார்த்திக் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். அதிரடியாக விளையாடிய ஸ்மித் 28 பந்துகளில் 68 (6 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து, ஜடேஜா வீசிய பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

கார்த்திக்கும் 11 ரன்னில் வெளியேற, அடுத்து  வந்த சர்மாவும் 8 ரன்னில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

4 முக்கிய வீரர்களின் விக்கெட்டை இழந்து மும்பை அணி திணறியது.

நிலைத்து விளையாடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட பொல்லார்ட்டும் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் கடைசி வரிசை வீரர்களும் சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள்.

இறுதியில் மும்பை அணி 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது.

இதனால் சென்னை அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 
Top