புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீர்கொழும்பு - ஏத்துக்கால கடற்கரையில் அரைகுறை ஆடைகளுடன் (அரை நிர்வா ண நிலையில்) மதுபோதையில் ஆபாசமாக நடமாடிய பெண்கள் மூவருக்கு நீர்கொழும்பு மேலதிக
நீதிவான் துவானி எஸ். வீரதுங்க தலா 2,500 ரூபா அபராதம் விதித்தார்.

குளியாப்பிட்டிய, கதிரானை, கோனவில பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே அபராதம் விதிக்கப்பட்டவர்களாவர்.

கடற்கரையிலிருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடமாடிய இந்தப் பெண்களை பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்செய்தனர். பிரதிவாதிகள் மூவரும் தமக்கெதிரான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
 
Top